MAAYAN SPECIAL ISSUE
மாயன் பன்னாட்டுத் தமிழாய்வு சிறப்பிதழ்
மாயன் பன்னாட்டுத் தமிழாய்வு சிறப்பிதழ் குறிப்பிட்ட தலைப்புகளில் கட்டுரைகளை எழுத மாணவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் அறிஞர்களை ஊக்குவிக்கிறது.
பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். தமிழ் சொல்வளம் நிறைந்த மொழி. அத்தகைய தமிழ் சார்ந்த ஆராய்ச்சியின் பரந்த பகுதிகளை ஆய்வதற்கும் அதை விரிவுபடுத்துவதற்கும் இந்த “மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ்” உருவாக்கப்பட்டுள்ளது. மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் தமிழ் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு, கலாச்சாரம், தொல்லியல் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் முன்னேற்றம் தொடர்பான அறிவைப் பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் சிறப்பிதழுக்கான தலைப்புகள் ஆசிரியர் குழு இணைந்து முடிவு செய்யும். அந்த தலைப்புகள் தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம், தொல்லியல் மற்றும் அதன் தொடர்புடைய துறை சார்ந்ததாக இருக்கும். அந்த கட்டுரைகள் நிறைவான கருத்துக்களையும், தகவல்களையும் கொண்டுள்ளதாக இருக்க வேண்டும்.
மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்பது தமிழ் மற்றும் தொடர்புடைய துறைகளில் கலை, இலக்கியம், சமயம், இலக்கணம், தத்துவம், வரலாறு, பண்பாடு, வாழ்வியல், அரசியல்,கலாச்சாரம், மொழியியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், மதம், அறிவியல் மற்றும் கணினித் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு, முன்னேற்றம் மற்றும் பரப்புதலை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த ஆய்விதழ் ஆகும்.
குறிப்பிட்ட தலைப்புகளில், சமீபத்திய ஆராய்ச்சியைப் பற்றி விவாதிக்க மற்றும் புதிய யோசனைகள் மற்றும் ஆராய்ச்சி திசைகளை உருவாக்க ஆசிரியர்கள் மற்றும் வாசகர்களின் சமூகத்தை உருவாக்குவதே எங்களது நோக்கம். சிறப்பிதழில் வெளியிடப்படுவதற்குத் தரமான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்
மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.
மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com
எங்களுடன் இணையுங்கள்...
எங்கள் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?
Want to become an Editorial Board Member or Reviewer of our journal?