preloader

Aim of MIJTR

Aim of MIJTR

எங்கள் இதழின் நோக்கம்

இந்தியாவில் பேசப்படும் பலதரப்பட்ட மொழிகளில் அதிகமான இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்ட மொழிகளில் ஒன்று தமிழ். தமிழ் மொழியில் தோன்றிய இலக்கியங்கள் 2500 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சொல்வளம் நிறைந்த ஒரு மொழியாகத் திகழ்கிறது.

ஒரு மொழி பழமையானது என்பதற்கு  அம்மொழி குறைந்தது 1500 அல்லது 2000 ஆண்டுகள் வரலாறு உடையதாகவும் , இலக்கண, இலக்கியச் சொல்வளம் உடையதாகவும், உயர்தரமுடைய பழமை மிக்க இலக்கியங்கள் கொண்டதாகவும், பிறமொழிக் கலப்பு எனும் மற்ற மொழிகளின் இலக்கிய மரபு கலவாமை இருத்தல்  வேண்டும். அதுவே செம்மொழி எனும் பண்பினைப் பெறுகிறது. செம்மொழியானது, (Classical Language) ஒரு மொழியின் இலக்கியப் பழமை மற்றும் அதன் பண்புகளாலும் செம்மொழித் தகுதியானது நிர்ணயிக்கப்படுகிறது. அத்தகைய மொழியானது தமிழ் மொழி. இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த, இலக்கிய, இலக்கண மரபினை கொண்டது தமிழ்மொழி. இம்மொழி வழக்கிலுள்ள செம்மொழிகளில்  ஒன்றாகத் திகழ்கிறது .

 

இலக்கண, இலக்கிய வளம் மிக்க திராவிடமொழியான  தமிழ் மொழியைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் தமிழர்கள். இம்மொழி சமஸ்கிருத மொழிக்கு (வடமொழி) இணையாகத் திகழ்கிறது. 2004-ஆம்  ஆண்டு இந்திய அரசால் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட தமிழ்மொழி இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளில்  அரசாங்க அலுவல் மொழியாக உள்ளது. உலகில் தொன்மையான வரலாறு பெற்ற இனங்களுள் ஒன்றாக தமிழர் இனம் திகழ்கிறது. இதில் தமிழ், தமிழர் வரலாறு என அறிஞர்கள் பலரும் பல்வேறு முறைகளால் ஆய்வு செய்தும், செய்யப்பட்டும் ஆய்வு முடிவுகள் வெளிவந்துள்ளன.

ஆய்வுகளுக்கு ஆய்வு மூலங்களாக, தமிழக வரலாற்று மூலங்களான இலக்கியங்கள், இலக்கணங்கள், உரைகள், கல்வெட்டுகள், செப்பேடுகள், அகழ்வாராய்ச்சிப் பொருட்கள், நாணயங்கள், கலைகள், வெளிநாட்டார் குறிப்புகள், ஆவண குறிப்புகள் ஆகியவை சான்றாக அமைகின்றன.

அவற்றுள் முழுமையாகக் கிடைக்காத மூலங்களும், கிடைத்தவை முழுமையாக ஆராய்ச்சி செய்யப்படாத நிலையிலும் கிடைத்த மூலங்கள் முழுமையானவை என்றும் கூறப்படமுடியாத நிலையிலும் என்று பல நிலைகளிலும் ஆராயப்பட வேண்டியதாக உள்ளது. எனவே நமக்குக் கிடைத்த வரலாற்று ஆதாரங்களைக்  கொண்டு, அவற்றைத் திரட்டிப் பாதுகாக்க வேண்டும்.

அவ்வாறு செய்வதன் மூலம் மூல ஆதாரங்களோடு தற்போது கிடைக்கும் ஆதாரங்களைக் கொண்டு துறைசார்ந்த வல்லுநர்களால் ஆராயப்படும் போது புதிய ஆய்வு முடிவுகள் கிட்டும். இவற்றை வகைப்படுத்தி முடிவுகளை ஆராயும் போது தெளிவான தன்மையும் வரலாற்று உண்மையும் புலப்படும்.

தற்போது தமிழ்மொழி, தமிழர்கள் பற்றியும் பல்வேறு ஆய்வுகள் எழுந்த வண்ணம் உள்ளன. இருப்பினும் நம் மொழியை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல, இன்னும் முறையான நடுநிலைத் தன்மையுடைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மொழிவளர்ச்சி, தோற்றம் என ஆராயும் போது பல்வேறு துறைகளோடும் பிறமொழிகளோடும் ஆராயப்படவேண்டியதாகிறது.

எனவே உங்கள் தமிழாய்வோடு பிற துறைகளையும் ஒப்பிட்டு, தொடர்புபடுத்தி எழுதும் அனைத்து ஆய்வுகளையும் மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்னும் ஆய்வுப் பெட்டகத்தில் சேர்ந்து வைக்க இரு கரம் குவித்து அன்புடன் அழைக்கின்றோம்.

எனவே தக்க ஆதாரங்களால் தமிழின் உண்மை நிலை, தமிழன் பெருமை, தமிழின் சிறப்பு ஆகியவற்றை எங்கள் இதழின் மூலம் உலகத்தில் உள்ள அனைவரின் கரங்களுக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் இதழின் நோக்கம். அதற்காகவே இந்த மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழைத் துவங்கியுள்ளோம்.
 

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?