preloader

Conference Process

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ்

கருத்தரங்க செயல்முறை

ஒரு கருத்தரங்கை ஆதரிப்பதற்கான முன்மொழிவு எங்கள் ஆசிரியர் குழுவால் அங்கீகரிக்கப்பட்டவுடன், கருத்தரங்குக் குழுவுடன் இணைந்து அவர்களின் கருத்தரங்கை எங்களின் இணையதளத்தின் மூலமும் தொடர்புகளின் மூலமும் சாத்தியமான எல்லா வழிகளிலும் கொண்டுசேர்க்கத் தொடங்குகிறோம்.

எங்களது அனுபவத்தால் எந்த கல்விகருத்தரங்கையும் நடத்துவதில் சிறந்த முறையில் ஆதரிக்க முடியும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். கருத்தரங்குகளுக்கு பின்வரும் சேவையை நாங்கள் வழங்குகிறோம், இதனால் அவர்களின் கருத்தரங்கு பற்றிய தகவல் சிறந்த முறையில் அனைத்து பேராசிரியர்கள், மாணவர்கள், கல்வி ஆய்வாளர்கள் மற்றும் கல்வி ஆர்வலர்களிடமும் சென்று சேர்கிறது.

கருத்தரங்கத்திற்கான பங்களிப்பு

  • கருத்தரங்கு தொடர்பான அனைத்து விவரங்களுடனும் எங்கள் இணையதளத்தில் கருத்தரங்கிற்கு ஒரு தனி வலைப்பக்கத்தை வழங்குதல்
  • கருத்தரங்கின் விவரங்களை எங்கள் ஆசிரியர்கள் பார்க்கும் வகையில் எங்கள் இணையதளத்திலிருந்து கருத்தரங்கு இணைய பக்கத்திற்கான இணைப்பை வழங்குதல்.
  • ஆசிரியர்கள் தங்கள் கட்டுரையை எங்கள் தளத்தின் மூலம் மாநாட்டில் சமர்ப்பிக்கும் படி ஆன்லைன் சமர்ப்பிப்பு படிவத்தை வழங்குதல்.
  • கருத்தரங்கை ஊக்குவித்து அனைவரிடமும் கொண்டு சேர்க்க ஆன்லைன் மற்றும் அச்சு  வடிவத்தில் விளம்பர ஆதரவு.
  • கருத்தரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் கல்வி சம்பந்தமான உதவி.
  • ஆசிரியர்களிடம் இருந்து பெறப்பட்ட கட்டுரைகளை சகமதிப்பாய்வு செய்ய ஆதரவு.
  • எங்கள் இதழில் ISBN எண்ணுடன் கருத்தரங்கு கட்டுரை வெளியீட்டை(conference proceedings) வெளியிடுதல்.
  • வெளியிடப்பட்ட அனைத்து கட்டுரைகளும் மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழில் தரவுத்தளங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டு பாதுகாக்கப்படும்.
 

உங்கள் கருத்தரங்குகான எங்களின் ஏற்பாடு

  • கருத்தரங்கை  ஏற்பாடு செய்தல்  /திட்டமிடுதல் (Organize/Plan the Conference)
  • கருத்தரங்கை அனைவருக்கும் கொண்டுசேர்த்தல்  (Promote the Conference)
  • கருத்தரங்கு வெளியீடு (Publish the Conference)
  • கருத்தரங்கு விளம்பரப்படுத்துதல் (Advertise the conference)
  • கருத்தரங்கை அனைவருக்கும் அடையாளபடுத்துதல் (Conference Branding)

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் ஆசிரியர் குழுவில் உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?